விளக்கேற்றும் திட்டம் வெற்றியா..தோல்வியா?
நேற்று இரவு இந்தியாவே கரெண்டை ஆப் செய்துவிட்டு செல்போன் டார்ச், விளக்கேற்றுதல், மெழுகுவர்த்தி ஏற்றுதல் என அல்லோலகல்லோலப் பட்டது. இந்த ஒளி ஏற்றுவதன் நோக்கம் என்ன? இதற்கான காரணம் ஏதேனும் உண்டா? என்பதைப் பற்றி நம் பிரதமர் எந்த விளக்கமும் சொல்லவில்லை. விளக்கேற்றுங்கள் என்று மட்டும் தான் சொன்னார். பெரும்பாலும் தமிழ்நாடு விளக்கேற்றாது என்றே பலரும் கணித்தார்கள்.
ஆனால் ஆச்சர்யமாக முக்கால்வாசிக்கும் மேலான மக்கள் தங்கள் வீடுகளில் மின்சாரத்தை அணைத்து விட்டு ஒளியேற்றினார்கள். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு இந்த விளக்கேற்றுதல் வைபோகம் பெரு வெற்றிதான். அதே நேரம் மக்களுக்கு அடுத்து அரசு என்ன செய்யப்போகிறது? பொருளாதார நிலைமை சரி செய்வது எப்படி? என்ற விசயங்களைப் பற்றி மோடி பேசாதது கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது.