Tamil Movie Ads News and Videos Portal

திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘இரண்டாம் நகர்வு’

வி.எம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் நகர்வு’. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தை இயக்கி தயாரித்திருப்பதோடு, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் வினோத் சிரஞ்சீவி. ஆஞ்சல் , கெனிஷா பிராஞ்சீஸ் மற்றும் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் குறிஞ்சி, மது, அவினாஷ், அரவிந்த், பிளஸ்ஸி, நிவேதா ஆகியோர்
முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

நண்பர்கள் நடத்தும் விருந்து நிகழ்வில் கொலை ஒன்று நடக்கிறது. அந்த கொலை பற்றிய விசாரணையில் ஈடுபடும் விசாரணை அதிகாரிகளான கதாநாயகன் வினோத் சிரஞ்சீவி மற்றும் கதாநாயகி கெனிஷா பிராஞ்சீஸ், அந்த கொலையின் பின்னணி என்ன? யார் கொலை செய்தது? ஆகியவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார்கள், என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடும், சஸ்பென்ஸ் மற்றும் திரில்லரான காட்சிகளுடனும் சொல்லியிருக்கிறார்கள்.