சமந்தா-விற்கு இது போதாத காலம் போலிருக்கிறது. அவர் ஏதாவது ஒரு விதத்தில் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டே இருக்கிறார். ஆரம்பத்தில் “ஜானு” படத்தின் தோல்விக்குப் பின்னர் தெலுங்கு ரசிகர்கள் அவரை ‘ப்ளாப் ஹீரோயின்” என்று அழைத்தனர். இதனால் மனமுடைந்த அவர் ஹீரோக்களை ஏன் அப்படி அழைப்பதில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். அடுத்த தான் திருமணம் முடிந்த பின்னர் தான் உடுத்தி வந்த உடைகள் குறித்த ஏற்பட்ட சர்ச்சைகளைப் பற்றி மனம் திறந்திருந்தார். அதில் உடை என் உரிமை என்று பேசியிருந்தார். இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்தது.
தற்போது மற்றொரு பேட்டியில் பேசிய சமந்தா, தன் முன்னாள் காதல் மற்றும் காதலரைப் பற்றி பேசியதாக வதந்தி பரவியது. இது குறித்து விளக்கம் கொடுத்திருக்கும் சமந்தா, “நான் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என் கவனம் முழுவதும் என் வாழ்க்கை மற்றும் சினிமா மீது தான் இருக்கிறது. என் முந்தைய காதல் பற்றி நான் யோசிக்கவே விரும்பவில்லை. அப்படி இருக்க நான் எப்படி அதைப் பற்றி பேசி இருப்பேன். அந்த பேட்டி நான் என் திருமணத்திற்கு முன்னர் கொடுத்த பேட்டி. சர்ச்சையை கிளப்புவதற்காகவே அந்த பழைய பேட்டியில் பேசிய செய்திகளைப் பரப்புகிறார்கள்..” என்று கடுகடுத்திருக்கிறார் சமந்தா.