இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு, தற்போது கமல்ஹாசனின் உடல்நலம் தேறி இருப்பதால் மீண்டும் தொடங்கவிருக்கிறது. ஏற்கனவே முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னை, ராஜமுந்திரி சிறைச்சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டதால், படப்பிடிப்பு தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி ஈ.வி.பி பொழுதுபோக்குப் பூங்காவில் வைத்து நடைபெற இருக்கிறது. இதற்காக இங்கு மிகப்பிரம்மாண்டமான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 3ல் தொடங்கும் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 35 நாட்கள் இங்கு நடைபெற இருக்கிறது.