தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நட்சத்திர நாயகியாக விளங்கி வருபவர் நயன்தாரா. ஆனால் அவரை சுற்றி வரும் சர்ச்சைகளுக்கும் எப்பொழுதுமே குறைவில்லை. அதில் முக்கியமான எப்பொழுதுமே இருந்து வரும் சர்ச்சை என்பது, அவர் நடித்த படங்களின் புரோமோஷன் விழாக்களில் அவர் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது தான். இது பல நேரங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. ஆனால் அவர் தரப்பில் இருந்து, படத்தின் அக்ரிமெண்டில் கையெழுத்து போடும் போதே பட விழாக்களில் கலந்து கொள்ளமாட்டேன், என்பதை கூறித்தானே நடிக்க சம்மதிக்கிறேன்..”
என்கின்ற பதில் கூறப்பட்டு வந்தது. இந்தப் பிரச்சனை புகைந்தபடியே இருந்து வர, கடந்த மகளிர் தினத்தன்று வருமான வரித்துறை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மகளிர்தின விழா கொண்டாட்டங்களில் நயன் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் எரியத் தொடங்கியிருக்கிறது. வருமான வரித்துறை ஏற்பாடு செய்யும் விழாக்கள் என்றால் பயந்து கொண்டு கலந்து கொள்கிறார். ஆனால் வருமானம் கொடுக்கும் துறையான சினிமா சார்ந்த விழாக்களில் கலந்து கொள்ள மாட்டாரா..? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர்..? என்று கொந்தளிக்கிறதாம் கோடம்பாக்கம்.