இந்த 21 நாட்கள் ஊரடங்கை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக செலவழித்து வருகின்றனர். சில நாயகிகள் இந்த கட்டாய விடுமுறையை இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற வலைதளப்பக்கங்களில் தங்களை பின் தொடரும் நபர்களின் எண்ணிக்கையை கூட்டிக் கொள்வதற்கான நேரமாக மாற்றி வருகிறார்கள். இதற்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்ட கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு சில நடிகைகள் வலை விரித்து வர.. த்ரிஷாவோ அவர் செய்த சம்பவங்கள் என்று பட்டியலிட்டப்பட்டிருக்கும் ஒரு மீம்ஸை பகிர்ந்துள்ளார்.
அதில் முதல் சம்பவம் முத்துப்பாண்டியை நிராகரித்தார் (கில்லி – பிரகாஷ்ராஜ்) இரண்டாவது சம்பவம் கெளதமை காதல் தோல்வியால் நோகடித்தார் (மெளனம் பேசியதே – சூர்யா, மூன்றாவது சம்பவம் கார்த்திக்கை கைவிட்டார் (விண்ணைத்தாண்டி வருவாயா – சிம்பு),
நான்காவது சம்பவம் கொடியை கொலை செய்தார் (கொடி – தனுஷ்), ஐந்தாவது சம்பவம் சக்திக்கு விவாகரத்து டார்ச்சர் தந்தார் (சகலகலா வல்லவன்), ஆறாவது சம்பவம் ராமை சன்னியாசி ஆக்கினார் (96 – விஜய் சேதுபதி). இத்தனை பேரை சம்பவம் செய்த த்ரிஷாவிற்கே ஆப்பு வைத்தவர் விநாயக் மகாதேவ் (மங்காத்தா – அஜீத்) என்று புகைப்படங்களின் தொகுப்புடன் இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஏதோ ரசிகர் ஒருவர் உருவாக்கிய இந்த மீம்ஸை ரசித்ததோடு அதை த்ரிஷா தன் வலைபக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.