கொரோனா பாதிப்பினால் இன்னும் இரு வாரங்கள் கழித்து இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க போதிய எண்ணிக்கையிலான மருத்துவமனைகள், படுக்கை வசதிகள், மருந்துகள், மருத்துவர்கள் என எதுவுமே இல்லாத நிலையில், மக்களின் அலட்சியப் போக்கு அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. எதிர்கொள்ளவிருக்கும் இந்த அபாயகரமான சூழலை கையாள அரசு போர்கால அடிப்படையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், என்னுடைய வீடாக இருக்கும் கட்டிடத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இயங்கும் மருத்துவர்களைக் கொண்டு நோய் பாதிப்புக்களான எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க தயாராக இருக்கிறேன். இதற்கான அனுமதியினை அரசு கொடுக்கும்பட்சத்தில் மக்களுக்கான இந்த சேவையை செய்ய நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” என்று டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.