இளையராஜா இல்லாத நாட்கள் என்பது.. எழுபது காலகட்டத்திற்குப் பிறகு இல்லை என்றே சொல்லலாம். அப்படியான மெல்லிய அதிர்வலைகளை நம் வாழ்வோடு இணைத்து விட்டவர் இளையராஜா. இன்று அவரது 77-ஆவது பிறந்தநாள். இணைய உலகமெங்கும் இன்று ராஜாயிசம் தான். மிக அற்புதமான இசைக்கலைஞரை உலகம் கொண்டாடுவது வியப்பல்ல. பொதுவாக எந்தவொரு துவக்கத்திற்கும் முடிவு என்பது உண்டு. ஆனால் ராஜாவின் இசைக்கு மட்டும் முடிவே இருக்காது. உதாரணத்திற்கு அவரின் ஒரு கனமான பாடல் ஒலித்து முடியும் போது அப்பாடல் அவரின் வேறோர் பாடலைக் கேட்கத்தூண்டும். இப்படியொரு முடிவிலி இசை ராஜாவினுடையது. அவரது இசை போல அவரும் நீண்ட ஆரோக்கியம் நிறைந்த ஆயுளைப் பெற்று ராஜா நாளும் நாளும் ராஜாங்கம் காட்ட வேண்டும் என்பதே எம் ஆசை!