Tamil Movie Ads News and Videos Portal

க்- விமர்சனம்

சிறுபடங்கள் பெரும் கவனிப்புக்கு உள்ளானால் சினிமா ஆரோக்கியமாக இருக்கிறதென்றே அர்த்தம். அந்த வகையில் க் படமும் ஓர் ஆரோக்கியமான முயற்சி

ஒரு விளையாட்டு விபரீதமாகி ஹீரோ யோகேஷுக்கு தலையில் பலத்த அடி பட்டுவிடுகிறது. மருத்துவமனையில் இருக்கும் அவர் ஒரு கொலையை ஜன்னல் வழியாக பார்க்கிறார். ஆனால் மருத்துவர்கள் கொலை எதுவும் நடக்கவில்லை என்கின்றனர். இதனால் அவருக்கு உளவியல் பிரச்சனைகள் வருகின்றன. அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள் தான் க் படத்தின் கதை

அறிமுகம் ஆன புதுமுகம் என்ற சுவடே இல்லாமல் நடித்துள்ளார் யோகேஷ். நடிகை அனிகா எதார்த்தம் மீறாமல் நடித்து கவனம் ஈர்க்கிறார். சிறு சிறு அசைவுகளிலும் கவனம் ஈர்க்கிறார் குரு சோமசுந்தரம். படத்தின் பெரும்பலம் அவரது நடிப்பு. ஆடுகளம் நரேன் ஒய்.ஜி மகேந்திரன் இருவரும் தங்கள் பங்களிப்பை திறம்பட செய்து அசத்தியிருக்கிறார்கள். புதுவகை திரைக்கதையால் ஜீவி படத்தில் கவனம் பெற்ற ரைட்டர் பாபுதமிழ் இப்படத்தில் இயக்குநராக நல்ல படைப்பைத் தர முயற்சித்திருக்கிறார். நிறைய இடங்களில் அட சொல்ல வைக்கிறது அவரது திரைக்கதை யுக்தி.

இப்படியான உளவியல் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து இயக்க தனித்தைரியம் வேண்டும். அதை பிசிறு தட்டாமல் செய்திருக்கிறார் பாபுதமிழ்.ஒளிப்பதிவு இசை இரண்டும் படத்தின் சைட் கிக்கர்கள் வெகுசில குறைகள் இருந்தாலும் முடிவில் நிறைவான படமாக நெஞ்சில் அமர்கிறது க்

-மு.ஜெகன் கவிராஜ்