Tamil Movie Ads News and Videos Portal

இடி மின்னல் காதல்- விமர்சனம்

ஹீரோவிற்கு அமெரிக்கா செல்ல வேண்டிய தேவை. அவர் அமெரிக்கா செல்லும் மனநிலையில் இருக்கும் போது ஒரு விபத்து நடந்துவிடுகிறது. விபத்துக்கு காரணமாக அவரே இருக்கிறார். அவர் போலீஸில் உண்மையைச் சொல்ல நினைக்கிறார். அப்படிச் சொன்னால் அமெரிக்க பயணம் தடைபடும் என்று ஹீரோயின் தடுக்கிறார். மேலும் மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சனை ஒருவருக்கு இருக்கிறது. அவரை Care செய்யும் பொறுப்பும் ஹீரோவிற்கு அமைகிறது. இன்னும் இரண்டு சிறு சம்பவங்களைக் கோர்த்து, இடி யார்? மின்னல் யார்? காதல் யார்? என்பதை இரண்டு மணிநேரம் 12 நிமிடத்திற்குள் பரபரப்பாகச் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர்

சிபி தான் ஏற்ற முதன்மைக் கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். நாயகி தன் நடிப்பில் துளியும் குறை வைக்கவில்லை. அபிஷேக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளவர் அசத்தியுள்ளார். ஹெட் காஸ்டபிளாக வரும் பாலாஜி சக்திவேல் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்

சாம்.சி.எஸ் தன் இசையால் படத்தை காப்பாற்ற முயற்சித்துள்ளார். சில இடங்களில் அவரது பேக்ரவுண்ட் ஸ்கோர் நன்றாக வொர்க் ஆகியுள்ளது. ஒளிப்பதிவில் குறையேதுமில்லை. எடிட்டிங், ஆர்ட் எல்லாம் ஓகே

மெதுவாக நகரும் கதைக்குள் இன்னும் வேகமூட்டும் காட்சிகளை அமைத்திருக்கலாம். மனப்பிறழ்வு கொண்ட கேரக்டர் பற்றிய டீடெய்லிங் குறைவு. அதைச் சரி செய்திருக்கலாம். திரைக்கதையில் இன்னும் செறிவைச் சேர்த்திருந்தால் படம் பாசிட்டிவாக வந்திருக்கும்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்