1998 முதல் 2010ம் காலகட்டம் வரை பிஸியான ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை மீனா. பின்னர் திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். பின்னர் அவரின் மகள் நைனிகா நடிக்க வந்தவுடன் அவரும் மீண்டும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். மலையாளத்தில் அதிகமாக நடித்து வந்த மீனா நீண்ட
இடைவெளிக்குப் பின்னர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். மேலும் வெஃப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த வெஃப் சீரிஸ் தொடர்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மீனாவிடம் ஒரு நிருபர் “அரசியல் வெற்றிடத்தை நிரப்ப நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா..? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மீனா “நான் அந்தளவிற்கு பெரிய ஆள் இல்லை.. ஆனால் எதிர்காலத்தில் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்” என்று பதிலளித்தார்.