நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வெல்வெட் நகரம் திரைப்படம் இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர் ஒருவர் ராதிகா குறித்து கேட்ட கேள்விக்கு, “எல்லோருக்கும் அம்மா ஒருவர் தான் இருக்க முடியும். எனக்கு அம்மா சாயா தான்.
ராதிகா எனது அம்மா இல்லை. அவர் எனது அப்பாவின் இரண்டாவது மனைவி. அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. வெறுப்பு இல்லை. அவரை நான் ஆண்டி என்று தான் கூப்பிடுவேன். அம்மா என்று கூப்பிடமாட்டேன். சமூக ஊடகங்களில் செயல்படும் பலருக்கு வேறு வேலை இல்லை என்பதால் தேவையில்லாமல் சர்ச்சைகளை கிளப்புவது போல் எழுதுகின்றனர்.” என்று பேசியுள்ளார்.