மலையாளத் திரையுலகின் முக்கிய நாயகர்களில் தவிர்க்க முடியாத நாயகன் துல்கர் சல்மான். இவர் சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில், “சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி நடித்த திருநங்கை கதாபாத்திரம் என்னை மிகவும் பாதித்தது. அதில் அவர் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்.
இது போல் எனக்கும் ஒரு திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் ஒரு நடிகனாக நம்மால் எதனை சிறப்பாக செய்ய முடியும்.. எதை செய்ய முடியாது என்பது நமக்குத் தெரியும். என்னால் அக்கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியாது என்று தோன்றவே மறுத்துவிட்டேன். இது போன்ற கதாபாத்திரங்களில் நான் நடிப்பதற்கு முன்னர், எனக்குள் இருக்கும் பெண் தன்மையினை முதலில் கண்டறிந்து வெளியே கொண்டுவர வேண்டும்” என்று தெரித்துள்ளார்.