கெட்டவன் என்ற சிம்புவின் படத்தை இயக்கியவர் கன்டி. அந்தப்படம் ட்ராப் செய்யப்பட்டதால் வெகுநாட்கள் படம் இயக்காமல் இருந்த அவர் தற்போது ஆதர்ஷ் கதையின் நாயகனாக அறிமுமாகும் ஒரு படத்தை இயக்கியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்துடன் இப்படம் தயாராகி இருப்பதாக படத்தின் பிரஸ்மீட்டில் படக்குழு கூறியது. விழாவில் இயக்குநர் பேடிய ஹைலட்ஸ் வேர்ட்ஸ் இங்கே,
இயக்குநர் கண்டி பேசியதாவது,
“இப்படி ஒரு சம்பவம் கெட்டவன் சமயத்தில் நடக்காமல் போய்விட்டது. பெரும்பாலும் மேடையில் ஏறும்போது சிலர் மேடையைத் தொட்டு கும்புடுவார்கள். நான் மேடை முன் இருப்பவர்கள் கால்களை தொட்டுக் கும்பிடுகிறேன்…
ஒரு பட விழாவிற்கு வி.ஐ.பி வந்தால் அவர் பற்றி தான் பேசுகிறார்கள். ராஜன் சார் ஒரு எவெண்டில் தனுஷ் சாரைப் பற்றி கிழித்துப் பேசினார். அது எனக்கே பிடிக்கவில்லை. அதனால் தான் இந்தப்பட விழாவிற்கு வி.ஐ.பிக்களை அழைக்கவில்லை.
கெட்டவன் படம் நின்ற பிறகு நான் பிச்சை தான் எடுத்தேன்..அதவாது பிச்சைக்காரன் என்ற படத்தை எடுத்தோம். அந்தப்படத்திற்காக உண்மையாக பிச்சை எடுத்தோம். ஒரு கட்டத்தில் ஹீரோயின் பிச்சை எடுப்பது போல் நடிக்கவில்லை என்று சென்றுவிட்டார். பின் மீண்டும் வந்தார். அதன்பிறகு எங்களுக்கு சரியான பணம் கிடைக்கவில்லை.
அதன்பின் தான் இந்த ஆதர்ஸ் போன் பண்ணினார். செளத்ரி சாரோட படம் பண்ணலாம் என்று புராசஸ் பண்ணோம். நடக்கல..கெட்டவன் படம் நின்றதற்கு காரணம் நான் நினைச்சது நடக்கல என்பதால் தான். இந்தப்படத்தை என் இஷ்டப்படி எடுத்து இருக்கிறோம். ஒரு ஆங்கிலப்பட லெவலுக்கு இப்படம் இருக்கும். நான் சவாலாக சொல்கிறேன். இந்தப்படத்தை இவ்வளவு பட்ஜெட்டில் வேறு யாராலும் தரமாக எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. பத்துலட்சம் ரூபாயை வைத்து என்ன கிழித்திருப்பார் என்று சிலர் நினைக்கலாம்..உண்மையாகவே நான். ச்சும்மா கிழிகிழி என்று கிழித்திருக்கிறேன்..
தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினாராக சேர்வதற்காக சென்றோம். மூனு லட்சம் கேட்டார்கள். மூனு லட்சம் கட்டினால் என்ன தருவார்கள் என்று கேட்டார் என் தயாரிப்பாளர். போண்டாவும் டீயும் தருவார்கள். என்றேன். அதன்பின் கில்டில் சேர்ந்தோம்.
இடையில் ஒரு தயாரிப்பாளர் ₹5000 அட்வான்ஸ் கொடுத்தார். நான் சொன்ன எல்லாக் கதைகளையும் நல்லால்ல என்றார். அவர் ஏழு பெண்களை வைத்து ஒரு கதை சொன்னார். அதாவது ஆட்டோகிராப் கதையைச் சொன்னார். அப்புறம் அவர் சொன்ன கதையை ஓ.கே சொன்னேன். பாண்டிச்சேரில டிஸ்கசன் நடந்தது. அங்கு ஆடிசன் வந்த பெண்களை எல்லாம் வரவழைத்தார். பார்த்தால் அந்தப்பெண்களிடம் அவர் தவறாக நடந்து கொண்டார். அந்த ஒருவழியாக அந்தப்படம் நடக்காமப் போச்சு. பிறகு அந்தப் பெண்கள் எல்லாம் ஒருமுறை வருத்தத்தோடு முறையிட்டார்கள்.
இளம் வயதுக்காரரான அந்த தயாரிப்பாளர் இறந்தும் விட்டார். அப்போது எனக்குத் துக்கம் வரவில்லை. ஏன் என்றால் தவறு செய்தால் இப்படி நடக்கும்.
நான் சினிமாவை மட்டும் தான் நேசிக்கிறேன். இந்தப்படத்தின் கதை என்னவென்றால் எல்லாருக்கும் காதல் புனிதமானது என்றால் எனக்குக் காதல் கொடூரமானது” இதுதான் என்றார்.