”பெரிய அண்ணன் மீது அதிக அன்பு உண்டு” – அனிருத்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகி இருக்கும் “மாஸ்டர்” படத்தின் இசை வெளியீடு சென்ற வாரம் நடந்து முடிந்தது. மொத்தமாக அப்படத்தில் பத்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்று ஏற்கனவே அறிவித்திருந்த இசையமைப்பாளர் அனிருத், ”அந்தக் கண்ணப் பாத்தாக்கா” என்று தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளார்.
இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத மற்றொரு இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இது குறித்த் டிவிட்டரில் கருத்து வெளியிட்டிருக்கும் அனிருத், “எனது பெரிய அண்ணன் யுவன் மீது அதிக அன்பு உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பாடலைப் பாடிய யுவன், எழுதிய விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார் அனிருத்.