Tamil Movie Ads News and Videos Portal

நிறைய தர்ம சங்கடங்களைச் சந்தித்துள்ளேன் -சீறு ஜீவா

இயக்குநர் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் சீறு. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் ஜீவா பேசியதாவது

 

“ரொம்ப சந்தோஷமாக இருக்கு. படத்தை எடுப்பதை விட அதை கொண்டு சேர்ப்பது இன்றைய காலகட்டத்தில் பெரிய வேலை. இங்கு நிறைய படத்திற்காக வந்துள்ளேன் படம் நல்லா இல்லை என்றால் தர்மசங்கடமாக இருக்கும். ஆனால் இன்று மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சுற்றி நிறைய நல்ல விசயங்கள் நடக்கிறது. இந்தப்படத்தில் கேபிள் டீவி ஆப்ரேட்டராக, துள்ளலான இளைஞனாக நடித்திருக்கிறேன். திரைக்கதை அட்டகாசமாக இருக்கிறது. இயக்குநருக்கு பயங்கரமாக கதை சொல்லும் திறமை இருக்கிறது. அவர் யாரிடம் வேண்டுமானாலும் கதை சொல்லி ஓகே வாங்கி விடுவார். அவ்வளவு திறமையானவர். இந்தப்படம் ஒரு பக்காவான கமர்ஷியல் படம். எல்லாவிததத்திலும் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் படமாக இருக்கும்.

83 பட புரமோஷனில் கச்சேரி, கச்சேரி பாடல் ரன்வீர் கேட்டு வாங்கி ஆடினார். இமான் சார் பாடல்கள் பற்றி அவர் பெருமையாக பேசினார். இந்தப்படத்தில் வா வாசுகி எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப்படத்திற்கு இமான் பெரும் பலமாக இருக்கிறார். சாந்தினி காட்சிகள் அருமையாக இருந்தது. அவர் அற்புதமாக நடித்துள்ளார். இந்தப்படம் வேல்ஸ் ஃபிலிம்ஸ்ல் நடித்தது எனக்கு சந்தோஷம். இன்னும் நிறைய படங்கள் உங்களுடன் செய்ய வேண்டும். வருண் நடித்த ரோலில் முதலில் நானே அவரை வேண்டாம் என்று சொன்னேன். கரடு முரடான கேரக்டர் ஆனால் கடுமையாக உழைத்து அசத்திவிட்டார். ரியா சுமன் ஜிப்ஸிக்கு ஆடிசன் செய்திருந்ததாக என்னிடம் சொன்னார். ஆனால் அந்தபடம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை இது தான் முதலில் ரிலீஸ் ஆகிறது. இந்தப்படத்தில் அனைத்து அம்சங்களும் கலந்து இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் நன்றி”என்றார்