Tamil Movie Ads News and Videos Portal

ரியோ மேல் எனக்கு எப்போதும் அக்கறை உண்டு- சிவகார்த்திகேயன்

நடிகர் ரியோ ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ப்ளான் பண்ணிப் பண்ணணும். இந்தப்படத்தை இயக்குநர் பத்ரி எழுதி இயக்கியுள்ளார். இன்று சென்னை சத்யம் தியேட்டரில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் படத் தயாரிப்பாளர்கள் ராஜேஷ், சிந்தன், ஹீரோ ரியோ உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். படக்குழுவை வாழ்த்தி சிவகார்த்திகேயன் பேசும்போது, “சிரிப்பு வரக்கூடிய படத்திற்கு எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும். இங்கு யாருக்குத் தான் சிரிக்க பிடிக்காது. ரியோவை நம்பி இப்படி ஒரு படம் எடுக்க முன் வந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ரியோ மேல் எனக்கு எப்போதும் எனக்கு தனி அக்கறை உண்டு” என்றார்