Tamil Movie Ads News and Videos Portal

”நானும் ரவுடிதான் – 2”

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரது காதலியான நயன்தாரா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து 2015ல் வெளியான திரைப்படம் “நானும் ரவுடிதான்”. இதில் காமெடி வேடத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றியைத் தந்த இந்தப் படத்தின் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது புதிய படமா..? இல்லை நானும் ரவுடிதான் படத்தின் இரண்டாம் பாகமா..? என்கின்ற தகவல் உறுதியாகத் தெரியவில்லை.

ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தை தவிர்த்து ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்திலும் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன் ‘நெற்றிகண்’ திரைப்படத்திலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திலும் நடித்து வருகிறார்.