Tamil Movie Ads News and Videos Portal

சினிமாவை பைத்தியக்காரத்தனமாக காதலிப்பவள் நான் – இந்துஜா

- Advertisement -

‘மேயாத மான்’ படத்தில் நாயகனின் தங்கையாக நடித்தாலும் கூட இந்துஜாவின் நடிப்பு அவரை எல்லாராலும் கவனிக்க வைத்தது. அதன் விளைவாக தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் அமைந்ததோடு, நல்ல நல்ல கேரக்டர்களும் அவரை நோக்கி அணி வகுத்தன. மேயாத மான், பூமராங், மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், சூப்பர் டூப்பர், மகாமுனி, பிகில் என நடித்த அத்தனைப் படங்களிலும் சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரங்கள். இந்நிலையில் இந்துஜா விருது திரைப்படங்களில் நடிக்க விரும்பவில்லை, கமர்ஷியல் படங்களில் தான் நடிக்க விரும்புகிறார். தன்னிடம் கதை சொல்லவரும் இயக்குநர்களிடம் அதையே வலியுறுத்துகிறார் என்ற செய்தி பரவியது. இது தொடர்பாக டிவிட்டரில் தனது பதிலை பதிவிட்டிருக்கும் இந்துஜா, இதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அதில் ”ஊடகங்கள் மிகவும் வலிமையானவை; அவைதான் சினிமாவின் முதுகெழும்பு என்று நான் நம்புகிறேன். அதில் வரும் செய்திகளை பாமர மக்கள் அப்பட்டமாக நம்புகிறார்கள். நான் சினிமாவை பைத்தியக்காரத்தனமாக காதலிப்பவள். நீங்கள் கூறியவாறு மோசமான ஒரு கருத்தை நான் ஒரு போதும் கூறியதில்லை. வார்த்தைகள் காயப்படுத்துகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -