Tamil Movie Ads News and Videos Portal

”கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடன் நான்” – கமல்ஹாசன்

தியேட்டர்களில் சென்று படம் பார்க்கும் காலம் மாறி அனைவரும் வெளியாகும் திரைப்படங்களை தங்கள் வீட்டில் இருந்தே பார்க்கும் காலம் வரும் என்று யாருமே நம்பவில்லை. ஆனால் இன்று அது நடந்தேவிட்டது. முக்கியமான நடிகர்கள் இயக்குநர்கள் என அனைவரும் ஓடிபி என்று சொல்லப்படும் ஆன்லைன் ப்ளாட்பார் ஆன நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார், ஸூ தமிழ் போன்ற தளங்களுக்கு பெரும் பொருட் செலவில் படங்களையும் வெஃப் சீரிஸ்களையும் எடுத்துக் கொடுத்தும், நடித்துக் கொடுத்தும் வருகின்றனர்.

தனது விஸ்வரூபம் படத்தை வெஃப் சீரிஸாக வெளியிட அன்றே நினைத்தவர் கமல்ஹாசன். ஆனால் அன்று அது சாத்தியப்படாமல் போனதால், தற்போது அவர் தென்னிந்திய மாநில மொழிகளில் வெஃப் சீர்ஸ் தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் செய்தியில், “டர்மரிக் மீடியா நெட்வொர்க்ஸ் மற்றும் பனிஜே ஆசியா நிறுவனத்துடன் இணைந்து நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்திற்கும் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடன் நான்; மிகப்பெரிய ரசிகர் கூட்டத்திற்கு மிகச் சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது முதல் அடி.” என்று குறிப்பிட்டுள்ளார்.