‘துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நரேன் கார்த்திக் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் “மாபியா”. அருண் விஜய் மற்றும் பிரசன்னா இருவரும் நாயகன் வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்ப்பைப் பெற்ற நிலையில் படம் வரும் பிப்ரவரி 21ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் கார்த்திக் நரேன், “இது வேட்டையாடி உண்ணும் ஒரு மிருகத்திற்கும், அது போன்ற மிருகங்களை வேட்டையாடும் வேட்டைக்காரனுக்குமான சண்டை. படத்தின் சண்டைக்காட்சிகளில் அருண் விஜய், பிரசன்னா இருவரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றனர். இப்படம் அருண் விஜய்க்கு புதிய அடையாளத்தைக் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.