Tamil Movie Ads News and Videos Portal

உதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் எப்படியோ..? ஆனால் சினிமாவில் இதுவரை அசகசாய வெற்றியையும் கொடுக்கவில்லை. அதே நேரம் அடி மேல் அடியும் வாங்கவில்லை. சராசரியாக ஓடும் அவரின் படங்கள் அவருக்கு ஒரு நிலையான இடத்தைக் கொடுத்திருக்கிறது. அவர் நடிப்பில் வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘மனிதன்’ , ‘சைக்கோ’ போன்ற படங்கள் ஓரளவிற்கு அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்த நிலையில் உதயநிதி அடுத்ததாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாடலாசிரியராக வெகுவாக அறியப்படும் அருண் ராஜா சென்ற ஆண்டு ‘கனா’ என்கின்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். படம் வெற்றி பெற்றது. கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பும் ஒரு பெண்ணின் கனவை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி இருந்தது. தற்போது உதயநிதியை இயக்கும் இப்படத்தில் அவர் என்ன மாதிரியான ஆட்டம் ஆட இருக்கிறார் என்பதைக் காண அவரின் உடன்பிறப்புகளும் ரசிகர்களூம் ஆவலோடு இருக்கிறார்கள்.