Tamil Movie Ads News and Videos Portal

Hotspot- விமர்சனம்

காதலியின் அப்பா தயாரிப்பாளர். காதலனோ இயக்குநராகத் துடிப்பவன். அவன் காதலியின் அப்பாவிடம் ஒரு கதை சொல்கிறான்..அந்தக் கதைக்குள் நான்கு கதைகள் விரிகின்றன.

ஒரு பெண், ஆணுக்குத் தாலி கட்டி, சமையலறையில் சிறைப்பட்டு, மாமனாரின் கண்டிப்புக்கு ஆளானால் எப்படி இருக்கும்? என்பது Happy Married Life-இன் கதை. ஆதித்யா பாஸ்கர் சிறப்பாக நடித்துள்ளார். சாம் CS- தன் இசையால் படத்தை கலகலப்பாக்கியுள்ளார்.

சாண்டி மாஸ்டரும், அம்மு அபிராமியும் Golden life கதையில் சில வித்தியாசமான சிக்கலை எதிர்கொள்கின்றனர். அதற்கான முடிவு என்ன என்பதை நோக்கி சின்ன அத்தியாயமாக பயணிக்கிறது இக்கதை. Interesting

காமம் வேறு, காதல் வேறு என வியாக்கியானம் பேசும் சுபாஷிடம் அப்படியா?’ எனக் கேட்டு, ஜனனி ஐயர் எடுக்கும் முடிவு தக்காளி சட்னி கதையாக விரிகிறது. இதுவும் தரமான சம்பவமாக இருக்கிறது

Fame Game என்ற கதை மனதைக் கனக்கச் செய்வதாக இருக்கிறது. குழந்தைகளை ரியாலிட்டி ஷோ மூலமாக எத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக்குகிறார்கள் என்ற ஆழமான விசயத்தைக் கொண்டுள்ள Fame Game அவசியமான படைப்பு.

நான்கு கதைகளின் மேக்கிங்கும் ரைட்டிங்கும் இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. சமூகத்திற்கு எதாவது ஒன்றைச் சொல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கோடு படம் எடுக்கப்பட்டிருந்தாலும் இப்படம் எல்லாத் தரப்பையும் ஈர்க்குமா என்று தெரியவில்லை. நடிகர்களின் பங்களிப்பு, தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு எல்லாம் படத்தை பாசிட்டிவாக மாற்றுகிறது.

Hotspot- positive vibe
3/5
-மு.ஜெகன் கவிராஜ்