ஹாலிவுட் திரைப்படத்தில் குரல் கொடுத்து பாடிய ஸ்ருதிஹாசன்
நடிகையாக ஜொலிப்பதோடு, இசை மீதும் தீராத ஆர்வம் கொண்டு இருப்பவர் ஸ்ருதிஹாசன். தமிழில் சில படங்களுக்கு இசையமைப்பதோடு, பாடல்களும் பாடியிருக்கிறார். அவர் தற்போது வரும் டிசம்பர் 22ல் வெளியாகவிருக்கும் ஹாலிவுட் படமான “போரஸன்” இரண்டாம் பாகத்தின் தமிழ் பதிப்பில் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரமான எல்சா-வுக்கும் குரல் கொடுத்திருக்கிறார். 2013ம் ஆண்டு வெளியான ‘போரஸன்’ திரைப்படம் அனிமேஷன் படப்பிரிவில் மிகச் சிறந்த படத்திற்கான விருதை வென்றது. எல்சா, அன்னா என்ற இரு சகோதரிகளுக்கு இடையேயான பாசப் பிணைப்பைப் பேசும் இப்படத்தின் ஹிந்திப் பதிப்பில் எல்சாவிற்கு ப்ரியங்கா சோப்ரா குரல் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.