‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ‘ஒரு குட்டிக் கதை’ என்கின்ற பாடலை கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிட்டனர். இன்று வரை அப்பாடல் 21 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இப்பாடலை இயக்குநர் அருண் ராஜா காமராஜ் எழுத, அனிருத் இசையமைத்திருந்தார்.
நடிகர் விஜய் தன் சொந்தக் குரலில் இப்பாடலைப் பாடி இருந்தார். பாடல் வரிகள் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளாகவே இருந்தது. தற்போது இப்பாடலைப் பார்த்த பிரபல நடிகர் பில் டியூக் இப்பாடலை இசையமைத்த அனிருத், பாடிய விஜய், எழுதிய அருண்ராஜா காமராஜ், இயக்கிய லோகேஷ் கனகராஜ் என அனைவருக்கும் டிவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்துக்கு லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.