பழிக்குப் பழி வாங்கும் கதை. பார்த்த படம்..பழகிய திரைக்கதை
சென்னையில் நாயகியை கண்டதும் காதல்கொண்டு அவர் பின்னாலே அலைகிறார் விஜய் ஆண்டனி. மற்றொருபுறம் ஒரு அரசியல் வாதியின் தேர்தல் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. போலீஸ் அதிகாரி கெளதம் மேனென் கொள்ளை போன பணத்தை கண்டுபிடிக்க துப்பறிகிறார். அரசியல் வாதியின் பணத்திற்கும் விஜய் ஆண்டனிக்கும் எப்படி முடிச்சு விழுந்து அவிழ்கிறது என்பதே படத்தின் திரைக்கதை
‘வருவது வரட்டும் நான் நடிப்பதை நடிப்பேன்’ என்ற வழக்கமான மோடிலே நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. காதல் காட்சிகளில் ஓரளவு கவனம் ஈர்க்கிறார். நாயகி கேரக்டர் வழக்கமான கமர்சியல் படங்களில் வரும் ஹீரோயின் கேரக்டர் போலவே எழுதப்பட்டுள்ளது. மிடுக்கும் நேர்மையும் உள்ள காவல்துறை அதிகாரியாக கெளதம் மெனென் ஈர்க்கிறார். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படி யாரும் பெரிதாக நடிக்கவில்லை
ஒளிப்பதிவாளர் சில இடங்களில் நல்ல நல்ல ப்ரேம்களால் அட போட வைக்கிறார். பாடல்கள் பெரிதாக கவரவில்லை. பின்னணி இசை பரவாயில்லை. எடிட்டிங் ஓகே ரகம்
திரைக்கதையில் துளியும் அழுத்தமில்லாததால் பார்வையாளர்களுக்கு எந்த உணர்வும் கடத்தப்படவே இல்லை. படத்தின் ஆரம்பக் காட்சியில் காட்டப்படும் ஒரு சீக்வென்ஸ் அதிர்வை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்து படம் பாசிட்டிவான பயணத்தை மேற்கொள்ளவில்லை. பழைய கதையோ..பழகிய கதையோ.. அதை புதிய ட்ரீட்மெண்டில் கொடுத்தால் ரசிகனுக்குப் பிடிக்கும் என்பதை இந்த ஹிட்லர் உணராமல், பழைய அப்டேட்களை வைத்து ரசிகர்களை வதை செய்கிறார்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்