ஒரு சூப்பர் ஹீரோ மூவி என்று எதிர்பார்த்துப் போனால் ..”இல்ல இது அதுக்கும் மேல” என நீட் உள்ளிட்ட கல்விப் பிரச்சனைகள் மற்றும் சிஸ்டம் சரியில்லை என்று நீட்டு நீட்டு என நம்முன் கருத்துக்களை நீட்டுகிறார்கள். படம் முடிவதற்குள் நாமும் பலமுறை நீட்டி நெறிக்க வேண்டியதிருக்கிறது. சிவகார்த்திகேயன் அவரின் கரியருக்கான கண்டெண்ட் என ஹீரோவைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் படத்தில் ஹீரோவாக எஞ்சி நின்று நெஞ்சை உயர்த்துவது அர்ஜுன் தான். அவர் கேரக்டருக்கு எழுதப்பட்ட பின்கதையில் அவ்வளவு அழுத்தம். அதில் பாதி கூட சிவா கேரக்டருக்கு இல்லாததால் நாம் ஹீரோவை பின் தொடர முடியவில்லை.
மாஸ் படங்களில் உடைக்கப்படும் பர்னிச்சர்களில் ஹீரோயினும் ரோபோ சங்கரும் இந்தப்படத்தில் உடைபட்டிருக்கிறார்கள்.
படத்தின் அட்டகாச விசயம் என்னவென்றால் வகுப்பறைத் தாண்டியும் பாடம் இருக்கிறது. அதில் கெத்து காட்டும் மாணவர்களை கண்டுகொள்ளவோ கட்டி அணைக்கவோ தான் ஆளில்லை என்று சொன்ன மேட்டர். மேலும் படத்தின் டெக்னிக்கல் ஏரியா அசாத்தியம்.
பேண்டஸி மூவி என்று முன் அறிவிப்போடு சொல்லி இருந்தால், அம்மாம் பெரிய 60 ஆயிரம் கோடி ரூபாய் டீல் நடக்கக் கூடிய இடத்திற்கு சிவா பல உபகரணங்களோடு எப்படி செல்ல முடியும்? என்பது உள்பட.பல லாஜிக் கேள்விகள் நமக்கு உறுத்தாது.
டூப்ளிகேட் சான்றிதழ் அடிச்சிக் கொடுப்பவன் என்று தெரிந்தும் போலீஸ் வந்து சிவாவிடம் எனக்கும் ரெண்டு அடிச்சிக் கொடுங்க என்று கேட்பதெல்லாம் தெய்வலெவல். நடிகர்களில் யாரும் குறை வைக்காத போதும் அவர்களின் பாத்திர வார்ப்பில் பெரும் குறைகள் இருப்பது படத்திற்கு முழுதாய் செல்ல முடியவில்லை. அது நடிகர்களையே ஈர்ப்பில்லாதவர்களாக மாற்றிவிடுகிறது.
இடைவேளைக்குப் பிறகான கதையை கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிட முடியும். ஏன் என்றால் அதன்பிறகு பெரும் படம் வசனத்திலே சுருங்கி விடும்.
பேசவந்த விசயம் சூப்பர், படத்தின் மேக்கிங் ஸ்டைல், பின்னணி இசை, ஆகியவையும் அசத்தல். இதெல்லாம் இருந்தாலே ஓ.கே என்பவர்களுக்கு மட்டும் ஹீரோ ஓ.கே
-மு.ஜெகன்சேட்