இன்னும் சில பெரிய நடிகைகள் கைகளில் சுத்தமாக வைத்துக்கொள்கிறோம் என்ற பெயரில் பிறருக்கு உதவத் தயங்கி அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் காஜல் அப்படியல்லாது தன் கருணையைக் காட்டி வருகிறார். இதோ அவர் செய்துள்ள உதவிகளின் விபரம்:
நடிகை காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட பெப்சி தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கினார்.
மேலும் கொரோனா வைரஸ் நிவாரண தொகையாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மஹாராஷ்ட்ரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும் வழங்கியுள்ளார்.
மூம்பையில் தான் வசிக்கும் பகுதியில் அருகளிலுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தானியங்கள் வழங்கினார். மேலும் பீட்டாவுடன் இணைந்து விலங்குகளை தத்தெடுத்தும் உணவளித்தும் உதவி செய்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.