மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த விருதில் ரூ1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை கேரளா அரசு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது.
வணக்கத்துக்குரிய இசைஞானி
வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. அதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு “வணக்கத்துக்குரிய இசைஞானி” என்ற பட்டமும் வழங்கப்பட உள்ளது.