மட்டயைத் தூக்கி அடிக்க மட்டும் அல்ல..மேக்கப் போட்டு நடிக்கவும் தெரியும் என்று களம் இறங்கி விட்டார்கள் கிரிக்கெட் பிரபலங்கள். சர்வதேச கிரிக்கெட்டர் இர்பான் பதான் விக்ரமோடு கோப்ரா படத்தில் நடிக்கிறார். அந்த வரிசையில் ஹர்பஜன் சிங்கும் நடிப்புக் களத்தில் இறங்கியுள்ளார். அவருக்கு நாயகி லாஸ்லியா.
ஷேண்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் “படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தான் ஹீரோ.
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமான லாஸ்லியா தற்போது ஹர்பஜன் சிங்குடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .
“பிரண்ட்ஷிப் ” இந்திய மொழிகளில் சம்மர் 2020 இல் திரைக்கு வர இருக்கிறது .