Tamil Movie Ads News and Videos Portal

ஏப்ரல் 5ல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமாகிறது ‘ஹனுமான்’!

அதிரடி ஆக்சன், பொழுதுபோக்குடன் பக்தியும் கலந்த, இந்த சூப்பர் ஹீரோ என்டர்டெய்னர், பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா உடைய சினிமா யுனிவர்ஸின் முதல் படைப்பாகும்.’ஹனுமான்’ படத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹனுமந்து எனும் சூட்டிகையான இளைஞன், ஹனுமனின் அருளைப் பெற்று சூப்பர் ஹீரோவாக எப்படி மாறுகிறான் என்பது தான் இப்படத்தின் மையம்.

அஞ்சனாத்ரி என்ற கற்பனைக் கிராமத்தில் நடப்பதாக இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் மூலம் தனது சக்தியைப் பெறும் சூப்பர் ஹீரோவான மைக்கேலை, ஹனுமந்து எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பற்றியது தான் இப்படம்.தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், வரலக்ஷ்மி சரத்குமார், சமுத்திரக்கனி, வினய் ராய் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஹனுமான் படத்திற்கான இசையமைப்பை கௌரா ஹரி மற்றும் அனுதீப் தேவ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை கௌரா ஹரி செய்துள்ளார். படத்திற்கு தாசரதி சிவேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏப்ரல் 5 முதல் ஹனுமான் திரைப்படத்தை, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளிக்கலாம்.