ஆன்மிகமும் க்ரைமும் காதலும் இணைந்தவர் இந்த ஹனு-மான்
ஹீரோ தேஜா இருக்கும் ஊரில் வில்லன் மக்களை அடிமைப்படுத்துகிறான். அதை எதிர்த்து கேள்வி கேட்கிறார் ஹீரோயின். இருந்தும் வில்லன் ஆட்டம் நிற்கவில்லை. வில்லனுக்கு எதிராக தேஜா களம் இறங்குகிறார். அவருக்கு சூப்பர் பவர் கொண்ட ஒரு கல் கிடைக்கிறது. அந்தக் கல்லை அடைய சில முயற்சிகளும் நடக்க, சூப்பர் பவர் கொண்ட ஹீரோ அடுத்தடுத்து என்ன செய்தார் என்பதே படத்தின் திரைமொழி!
ஒரு நல்ல மாஸ் ஹீரோ மெட்டிரியலாக உருமாறியுள்ளார் தேஜா.. ஆக்ஷன் காதல் என எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடியுள்ளார். அம்ரிதா ஐயர் கேரக்டர் வடிவமும் நன்றாக எழுதப்பட்டுள்ளது. அவரும் சிறப்பாக நடித்துள்ளார். வரலெட்சுமி சரத்குமார் தேஜாவின் உடன்பிறப்பாக வருகிறார். நன்றாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி உள்ளிட்ட எல்லா நடிகர்களும் தத்தம் தம் கேரக்டர்களை உள்வாங்கி அருமையாக நடித்துள்ளனர்
சமீபகாலமாக தெலுங்குப்படங்கள் பேன் இண்டியா படமாக மாறுவதுண்டு. இப்படமும் அந்த வகை. படத்தின் விஷுவலுக்காக கேமராமேன் அவ்வளவு மெனக்கெட்டுள்ளார். ஒவ்வொரு ஷாட்டும் ரிச்-ஆகவே இருக்கிறது..Good one.
இசைஞரின் பணியும் படத்தின் சிறப்புக்குரிய ஒன்று. இசைவழியே படத்தின் கதை தொய்வின்றி பயணிக்கிறது
லைட்டான பேண்டஸி கதையில் சரியாக எமோஷ்னலை இணைத்துள்ளார் இயக்குநர். அது நன்றாக எடுபட்டுள்ளது. பொங்கல் ட்ரீட் என சொல்லுமளவு படம் வெல்லம் போல் இனித்துக்கிடக்கிறது. பின்பாதியை செம்மை செய்திருக்கலாம். க்ளைமாக்ஸ் அந்தக் குறையை நிவர்த்தி செய்துவிட்டதால் ஹனு-மான் அழகியமானாகி விட்டது
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்