‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங், சன்னி வேயோன், லால் உள்பட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ஜிப்ஸி. இப்படம் பல மாதங்களுக்கு முன்பே ரெடியாகிவிட்டாலும் கூட, சென்சார் வாங்குவதில் சிக்கல் இருந்தது. படம் அரசை விமர்ச்சிப்பதாகவும், இந்து மதத்தினரை புண்படுத்தும் கருத்துக்கள் இருப்பதாகவும், உபி முதல்வர் ஆதித்ய நாத் யோகியை கிண்டல் செய்வது போன்ற காட்சிகள் உள்ளதாகவும் கூறி சென்சார் தர மறுத்தனர்.
இதனால் சில காட்சிகளை நீக்கி மீண்டும் மறுதணிக்கைக்கு படக்குழுவினர் அனுப்பினர். தற்போது இப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்று வரும் மார்ச் 6ல் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ஸி என்றால் ஒரு இடத்தில் நிலையாக வாழாமல், ஒவ்வொரு இடமாக அலைந்து திரியும் நாடோடி என்று பொருள். இப்படத்தில் நடிகர் ஜூவா அப்படிப்பட்ட ஒரு நாடோடியாகத்தான் நடித்திருக்கிறார். படத்தில் பல கம்யூனிச வசனங்களும் ஜோக்கர் படத்தினைப் போல் அமைந்திருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.