2009ம் ஆண்டு வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அப்படி அவர் இசையமைக்க வந்த போது அவரின் வயது 19 தான். ‘வெயில்’, ’ஆடுகளம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘’அங்காடித் தெரு’, தலைவா’, ‘பரதேசி’, ‘தெறி’ என இவர் இசையமைத்த படங்கள் இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
மேலும் ‘டார்லிங்’ படத்தின் மூலம் நாயகராகவும் களம் புகுந்த, ஜி.வி பாலாவின் இயக்கத்தில் நாச்சியார் திரைப்படத்திலும் நடித்தார். நாயகனாக நடித்து வந்தாலும் வெற்றிமாறன் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைக்கவும் செய்கிறார். இவர் இசையமைப்பில் உருவான ‘அசுரன்’ படத்தில் பின்னணி இசை பரவலான பாராட்டுக்களைப் பெற்றது. இதனையடுத்து சூர்யா-வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்திற்கும் ஜி.வி தான் இசை. இது இசையமைப்பாளராக அவருக்கு 75ம் படம் என்பது அவருக்கு இன்னும் சிறப்பு.