Guardians of the Galaxy Volume 3 – விமர்சனம்
மனித மூளையை விட ஆற்றல் மிகுந்த மூளைகளை உருவாக்கி தனி ஒரு உலகை அமைக்க இருக்கும் வில்லனை ஹீரோ டீம் தீர்த்துக்கட்டுவதே படத்தின் ஒன்லைன்
ராக்கெட் ரகூன் என்ற ஒரு பாசிட்டிவான கேரக்டரை சிறுவயதிலே எடுத்துச் செல்லும் வில்லன், மிகப்பெரும் ஆராய்ச்சிகளை செய்து அந்தக் கேரக்டருக்கு பெரும் ஆற்றலையும் செயல்திறனையும் கொண்டு வருகிறான். அதைப் போலவே பல மிருகங்களுக்கும் அப்படியான ஆற்றலை கொண்டு வருகிறான். பின் அனைத்தையும் கொன்றுவிட்டு, அவைகளின் மூளைகளை வைத்து தனியாக ஒரு உலகை படைக்க நினைக்கிறான். வில்லனின் இந்த விபரீதத்தை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதாக விரிகிறது இப்படத்தின் திரைக்கதை (முக்கியக்குறிப்பு: முதல் இரு பாகங்களைப் பார்த்தவர்களுக்கு மட்டுமே இந்தப்படம் முழுமையாக கனெக்ட் ஆகும். அதனால் முதலிரு பாகங்களைப் பார்க்காதவர்கள் பார்த்து விட்டு இந்த மூன்றாம் பாகத்தை பார்ப்பது நலம்)
ஹாலிவுட் ஸ்டார்களின் ஸ்கிரீன் ப்ரசன்ஸ் வழமை போல அருமையாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. சிறு சிறு கதாப்பாத்திரங்களும் அழுத்தமான முத்திரையைப் பதிக்கிறார்கள்.
சிறுசிறு பிசிறுகள் வரைகலையில் தெரிந்தாலும் அவை படத்தின் எமோஷனை எங்குமே தடை செய்யவில்லை. ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் எபெக்ட், பின்னணி இசை என ஒரு பக்கா தொழில்நுட்ப நேர்த்தியுடன் உருவாகியுள்ளது படம். அவ்வளவு ஏன் தமிழ் டப்பிங் கூட சிறப்பாக அமைந்துள்ளது
சீரான திரைக்கதையும் ஆக்ஷனை விட அதிகமாக ஈர்க்கும் எமோஷ்னல் ஏரியாக்களும் படத்தைக் கொண்டாட வைக்கிறது. முதல் இரு பாகங்களைப் பார்த்தவர்களுக்கு இப்படம் செம்ம சம்மர் ட்ரீட்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்