அநியாயமாக பலியிடப்பட்ட ஒரு உயிர்..பேயாய் வந்து பழிவாங்கும் வழக்கமான பேய்பட கதை
ஹன்சிகாவிற்கு ஒரு அதிசய கல் கிடைக்கிறது. அந்தக் கல்லை உடைக்காத வரையில் அவருக்கு நல்லது நடக்கும். அந்தக் கல் உடைந்தால் அவர் வாழ்வும் உடையும் எனச் சொல்லப்படுகிறது. நாம் எதிர்பார்த்த மாதிரியே அந்தக் கல் உடைகிறது . ஆனால் அதன்பின் நாம் எதிர்பாராத விசயங்கள் நடக்கிறது. அவை என்ன? என்பதை திரைக்கதையாக்கியுள்ளார் குரு சரவணன்
ஹன்சிகா ஒரு தேவதை. பேய்போன்ற தோற்றத்தில் வருகிறார். ஆனாலும் தேவதையாகவே தெரிகிறார். மினிமலனான நடிப்பை வழங்கியுள்ளார். மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, ராஜுவ்மேனென் உள்பட பல நடிகர்கள் தங்கள் வேலையை தங்குதடையின்றி செய்துள்ளனர்
ஒளிப்பதிவாளர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். திகில் கூட்டக்கூடிய சில வாய்ப்புகளை இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்கலாம். சாம்.சி.எஸ் தன் பின்னணி இசையை எப்போதுமே முன்னணியில் வைத்திருப்பவர். இதிலும் அதையே செய்துள்ளார். 2 மணி நேரத்திற்கு படத்தை அடக்கியதில் தெரிகிறது எடிட்டரின் உழைப்பு
ஓரளவு இன்ட்ரெஸ்டிங்கான ஒன்லைனை நல்ல அவுட்லைனாக மாற்ற முயற்சித்துள்ளார் குரு சரவணன். பெரிதாக தொய்வு இல்லாத திரைக்கதை நம்ம போரடிக்கவில்லை. மேக்கிங்கிலும் குரு சரவணன், சபரி கூட்டணி நல்ல அவுட்புட்-ஐ வழங்கியுள்ளது. வழக்கமான பேய்படம் என்றாலும் சின்னச் சின்ன ட்விஸ்ட்களுக்காக படத்தை ஒருமுறை பார்க்கலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்