கே.ராஜன் கலந்துகொள்ளும் பட விழாக்களில் நிச்சயம் யூட்யூபர்களுக்கு கன்டென்ட் கிடைக்கும் என்பது இணையத்தில் எழுதப்பட்ட விதி.
ஜி என் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிராண்மா’. இப்படத்தை ஷி ஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இவ்விழாவில்
படத்தின் தயாரிப்பாளர் ஜெயராஜ். ஆர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மேலும் நிகழ்ச்சியில் படக்குழு உள்பட நடிகர்& தயாரிப்பாளர் கே.ராஜனும் கலந்துகொண்டார். வழக்கமாக சினிமா மேடைகளில் அவர் ஆடும் ருத்ர தாண்டவம் ஊர் அறிந்ததே. அன்று அவர் பேசிய (வீசிய) பேச்சுக்களில் சில..
*நான் எது பேசினாலும் ட்ரெண்ட் ஆகிவிடுகிறது*
*கேரளசினிமாவை நம் சினிமா பின்பற்ற வேண்டும்*
*தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழ்படம் எடுப்பது ஆச்சர்யமில்லை. அப்படி எடுத்து இந்த 30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளார்கள்*
*இங்கே ஹேமந்த் மேனன் என்கிற நடிகர் வந்திருக்கிறார். அவர் கேரளாவில் கதாநாயகனாக நடித்தவர். இந்தப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். நம் ஊரில் இப்படி நடக்குமா? கதாநாயகன் ஆகிவிட்டால் வில்லனாக நடிக்க மாட்டார்கள். விஜய்சேதுபதி மட்டும் விதிவிலக்கு*
*இந்த மாதிரி பேய்ப்படங்களுக்கு மொழியே கிடையாது. அனைத்து மொழிகளிலும் இந்தப்படம் வெற்றிபெற வேண்டும்*
ராஜனின் தாண்டவம் அடுத்தடுத்த விழாக்களில் தொடரும்🔥