தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி இயக்குநராக பணியாற்றி வரும் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி, தெலுங்கில் வெளியாகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட் ஃபாதர்’. மெகா ஸ்டார் சிரஞ்சீவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமுத்திரக்கனி, சத்யதேவ், சுனில், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையே அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசிபர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் தான் காட்ஃபாதர்.
இதனை வெற்றி பெற செய்திருப்பதால் படத்தின் இயக்குநரான மோகன் ராஜாவிற்கு தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகிலிருந்தும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ திரைப்படம் விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இயக்குநர் மோகன் ராஜா நட்சத்திர இயக்குநர் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது.
#GodFather #காட் ஃபாதர்