ஒரு படத்தின் ட்ரைலர் டீசர் அந்தப்படத்தின் ப்யூச்சரைச் சொல்வதைப் போல ஒரு படத்தை யார் ரிலீஸ் செய்கிறார்கள் என்பதும் அந்தப்படத்தைப் பார்க்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும். அந்த வகையில் தயாரிப்பாளர்& டிஸ்டியூப்பிட்டர் தனஞ்செயன் ஒரு படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார் என்றால் அப்படத்தில் ஒரு நல்ல எண்டெர்டெயின்மெண்ட் இருக்கும் என்பது பொதுவிதி. யூ-டர்ன், காற்றின் மொழி, கொலைகாரன் என அவருடைய சமீத்திய படங்கள் எல்லாம் ஹிட். அதனால் அவர் இப்போது வாங்கி வெளியிட இருக்கும் காவல்துறை உங்கள் நண்பன் என்ற படமும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று இப்படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படக்குழுவினர் யாரும் படத்தைப் பற்றி அதிகம் பேசவில்லை. அதனால் நிச்சயம் படம் பேசும் என்ற நம்பிக்கை விழாவில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தோன்றியது.