Tamil Movie Ads News and Videos Portal

விஜய்சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் பரிசு பெற தயாராகுங்கள்

- Advertisement -

தன் எதார்த்த நடிப்பால் மக்களின் மனதில் மக்கள் செல்வனாக வீற்றிருக்கும் நடிகர் விஜய்சேதுபதியின் பிறந்த நாளை மிக வித்தியாசமாக கொண்டாட இருக்கிறது திரைப்பட டாட் காம் எனும் இணையதளம்.

நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது.

இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும் ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி இடம் பெறுகிறது.

 

இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டிகள் தவிர பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒரு போட்டியும் நடத்தப்படுகிறது விஜய் சேதுபதியை எதனால் பிடிக்கும் என்று சிறப்பாகச் சொல்லும் 41 பெண்களுக்கு தலா 1,000 வீதம் பரிசு அளிக்கப் படுகிறது.

இந்த போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 30. 2019.

இந்தப் போட்டிகள் குறித்த மேலதிக விவரங்களுக்கு திரைப்படம் டாட் இன் என்ற இணைய தளத்தை சொடுக்கவும்

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.