Tamil Movie Ads News and Videos Portal

துப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி

கடந்த 1980களின் இறுதியில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கௌதமி. இவர் தற்போது ‘லைஃப் அகைன்’ என்ற தொண்டு நிறுவனம் உருவாக்கி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த மறுவாழ்வு மையமாக்கி வருகிறார். இந்நிறுவனம் சிகிச்சை, வாழ்க்கையின் முக்கியத்துவம், தன்நம்பிக்கை, மன உறுதி, புற்று நோயை எதிர்த்து போராடும் மன வலிமை என பல சிறப்பு குணங்களை வழங்கி வருகிறார்.

 

இந்நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் பேசி மகிழ்ந்து அன்பளிப்பு கொடுத்து புத்தாண்டை தொடங்கி இருக்கிறார் கௌதமி. எல்லாருக்கும் கஷ்டங்கள் இருக்கிறது. அந்த கஷ்டங்களை மறந்து அனைவரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்று கூறி அன்பை பரிமாறிக் கொண்டார் கௌதமி.

மேலும் இந்த புத்தாண்டை துப்புரவு தொழிலாளர்களுடன் கொண்டாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.