’தர்பார்’ படத்தைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா ‘எல்.கே.ஜி’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜி, மெளலி மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தில் இப்பொழுது கெளதம் கார்த்திக் மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ புகழ் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் இணைந்துள்ளனர். கெளதம் கார்த்திக் கெளரவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் கெளதம் கார்த்திக் உடன் இணைந்து எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை யாஷிகா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.