Tamil Movie Ads News and Videos Portal

தனுஷுடன் நடிக்கும் கவுரி கிஷண்

“96” படத்தில் சின்ன வயது த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் மலையாள நடிகை கவுரி கிஷண். இவரின் நடிப்பைப் பார்த்து வியந்து போய் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான “ஜானு” படத்திலும் அதே கதாபாத்திரம் இவருக்கு வழங்கப்பட்டது.

தற்போது இவர் ‘பரியேறும் பெருமாள்’ புகழ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “கர்ணன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திருநெல்வேலி வட்டாரப்பகுதிகளில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட கவுரி, இயக்குநர் மாரி செல்வராஜுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் இப்படத்தில் அவரும் இணைந்திருப்பது உறுதியாகியிருக்கிறது.