கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறுவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சில வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல் போன்றோர் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நேற்று முந்தைய தினம் ஒரு டிவிட்டை வெளியிட்டனர். அதில் ரஜினிகாந்தின் டிவிட் மட்டும் அகில இந்திய டிவிட்டர் இணையதளத்தால் நீக்கப்பட்டது.
இது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இது குறித்த தகவலை டிவிட்டர் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், “திரு.ரஜினிகாந்தின் டிவிட்டர் செய்தி விதிமுறைகளுக்கு மீறானது. மேலும் அதில் நோய் குறித்த தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. அதனால் தான் அதை நீக்கினோம். பிரபலங்கள் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் முன்னர் துறை சார்ந்த வல்லுனர்களிடம் தாங்கள் பேச இருப்பது சரிதானா..? என்று தெளிவிபடுத்திக் கொண்டு பின்னர் பேசுவது சிறப்பாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர். மேலும் பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் போட்ட டிவிட்டர் வீடியோவும் இதே காரணத்திற்காகவே நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.