Tamil Movie Ads News and Videos Portal

அவசியம் காண வேண்டிய ஐந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

புதுமையான கதைக்களன்களைக் கொண்ட தமிழ் இணையத் தொடர்கள் சமீப காலமாக ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கின்றன. முன்னணி இணையவழி ஒளிபரப்பு தளமான எம்.எக்ஸ்.பிளேயர்ஸில் இலவசமாகவே கண்டு களிக்கக்கூடிய வேண்டிய சிலவற்றை இங்கே நாங்கள் பட்டியலிட்டிருக்கிறோம். நகைச்சுவை, டிராமா மற்றும் அரட்டை அரங்கம் என பரந்துபட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் வருவனவற்றில், நாங்கள் தேர்வு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சிகள் சுய தனிமைப்படுத்தல் என்ற இந்த காலகட்டத்தில் முழுமையான பொழுது போக்கைத் தரவல்லதாக இருக்கும்.

1. தந்தூரி இட்லி

இந்தத் தொடரின் தலைப்பே இதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறதல்லவா பிரத்யேக எம்.எக்ஸ். மற்றும் மிர்ச்சி பிளேயின் நகைச்சுவை கலந்த காதல் தொடரான இது, பணி நிமித்தமாக வட இந்தியாவிலிருந்து சென்னைக்கு வரும் பெண், இங்குள்ள அலுவலக கலாச்சாரத்திற்குள் தன்னை பொருத்தித் கொள்ள சிரமப்படுவதை விவரிக்கிறது. தேவன்ஷு ஆர்யா மற்றும் ஏ.எல்.அபநிந்தரன் இணைந்து இயக்கியிக்கும் ஆறு பகுதியைத் கொண்ட இத்தொடரில் அஜய் பிரசாத், அவந்திகா மிஸ்ரா ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்க, விகால்ஸ் விக்ரம், வினோத் குமார், வாட்ஸப் மணி, சுஹாசினி சஞ்சீவ் மற்றும் மிர்ச்சி சபா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்தொடரின் முன்னோட்டத்தைக் காண https://bit.ly/Tandoori_IdlyTrailer

தொடரைக் காண https://bit.ly/TandooriIdly_YT_ep1

2. க்வீன்

தேசிய விருது வென்ற கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கியிருக்கும் எம்.எக்ஸ்.ஒரிஜினலான இத்தொடர், சக்தி சேஷாத்ரியின் வாழ்க்கையை விவரிக்கிறது. விருப்பமே இல்லாமல் நடிகையாகி, மனம் இல்லாமல் அரசியலுக்கும் வந்து இறுதிவரை இணக்கமற்றவராகவே இருந்த பெண்மணியின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதை இது. சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்து வரும் பீனிக்ஸ் பறவையைப்போல் விதியின் குழந்தையாக வந்து, நாட்டையே ஆண்ட பெண்ணின் கதையான இத்தொடர் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் சக்தி வேடம் ஏற்க, அனிகா சுரேந்திரன், அஞ்சனா ஜெயபிரகாஷ், இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

3. திருமணம் – நிபந்தனைகளுக்குட்பட்டது

எம்.எக்ஸ்.எக்ஸ்க்ளூஸிவ் மற்றும் மிர்ச்சி பிளே ஒரிஜினலான திருமணம் – நிபந்தனைகளுக்குட்பட்டது என்ற தலைப்பிலான இந்தத் தொடர் மிர்ச்சி செந்தில் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஜா இணைந்து நடித்தது. சிறியதொரு நட்சத்திரக் குறியிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதை பல முக்கியமான விஷயங்களில் நாம் ஏற்றுக் கொள்வதைப்போல், புனிதமான திருமண பந்தமும் நிபந்தனைகளுக்குட்பட்டதா என்பதை சுவைபட அலசுகிறது ஆறு பகுதிகளைக் கொண்ட இத்தொடர்.

4. ஃபேமஸ்லி பிலிம்பேர்
அபிமான நட்சத்திரங்களின் காதல், உறவுகள், வதந்திகள் மற்றும் இன்ன பிறவற்றையும் தெரிந்து கொள்ள உதவும் அரட்டை அரங்க நிகழ்ச்சிகளை பாலிவுட் பெரிதும் விரும்புகிறது. சரி பிராந்திய அளவில் உச்சம் தொட்ட நட்சத்திரங்களின் பயணம் எப்படி அமைந்தது பிராந்திய நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தெரிந்து கொள்ளக் கூடிய அரட்டை அரங்கங்களை, ஃபேமஸ்லி பிலிம்பேர் என்ற தலைப்பில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது எம்.எக்ஸ்.பிளையர். ஏழு மாநில மொழிகளில் வெளியாகும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் நட்சத்திரங்களை ரசிகர்கள் நெருக்கமான வகையில் அறிந்து கொள்ளத் தக்க வகையில் அமைந்திருக்கிறது.

5.லாட்ஸ் ஆஃப் லவ்

ஊடாகவும் பாவாகவும் பின்னிப் பிணைந்த நான்கு நண்பர்கள் எவ்வாறு ஒருவரையொருவர் சார்ந்து வாழ்கிறார்கள் என்பதை உணர்வு பூர்வாகவும் நகைச்சுவையாகவும் விளக்குகிறது இந்தத் தொடர். உயரம் தொட்டுக் கீழிறங்கும் ரோலர் கோஸ்டரின் த்ரில்லான அனுவபவத்தை பார்வையாளர்கள் இதில் பெறலாம். அரவிந்த் கிருஷ்ணன், நிஷாந்தி, ராம் ஜீபு மற்றும் சுதீர் நடிக்கும் இத்தொடரை ஜே.லக்ஷ்மண் குமார் இயக்கியிருக்கிறார்.

செயலியை தரவிறக்கம் செய்ய Web: https://www.mxplayer.in/