ஜெயம் ரவியின் 25ம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
மாறுபட்ட திரைக்கதை கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் நிலையான வெற்றியைப் பெற்று வரும் நாயகனாக உருவெடுத்துள்ளார் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “கோமாளி” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இவரது அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவரது 25வது படமாக தனி ஒருவன் -2 அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட பொழுது, யாரும் எதிர்பாராத வகையில் போகன், ரோமியோ ஜுலியட் படங்களை இயக்கிய லக்ஷ்மண் அவ்வாய்ப்பைப் பெற்றார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படம் விவசாயம் தொடர்பான கதை என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதை மெய்ப்பிக்கும் விதமாக போஸ்டர் டிசைனும் அமைந்துள்ளது. அதில் சோகத்துடன் இருக்கும் நான்கு விவசாயிகளின் முகத்திற்கு நடுவில் ஜெயம் ரவியின் முகம் இடம் பெற்றுள்ளது.