முழுக்க முழுக்க திருநங்கைகளின் வாழ்வில் நடக்கும் விசயங்களை சம்பந்தப்படுத்திய கதை filter gold. அவர்கள் வாழ்வில் இருந்து தொகுத்த விசயங்களில் பாசிட்டிவ்களை விட நெகட்டிவ்கள் தான் படத்தில் அதிகமிருக்கின்றன. இருப்பினும் சிலபல உண்மைகள் முகத்தலடிப்பதால் filter gold படத்திற்கு ஓர் க்ரீன் சிக்னல் கொடுக்கலாம்
விஜி, டோரா, சாந்தி என மூன்று திருநங்கைகள் உயிர் நண்பிகள். இவர்களில் ஒருவரை அரசியல் வாதியும் தாதாவுமான ஒருவரின் மகன் குத்திக் கொன்றுவிடுகிறான். அவனை பழிதீர்க்க மற்ற இருவரும் முயற்சிக்கிறார்கள். முயற்சி வென்றதா? என்பதே கதை
முதலில் படத்தில் விஜி என்ற தலைமைப் பாத்திரம் ஏற்றிருக்கும் இயக்குநர் விஜயபாஸ்கருக்கு பெரும் பாராட்டுக்கள். திருநங்கைகளின் உடல்மொழியை நடிப்பில் புகுத்தியதோடு டெரர் லுக்கிலும் மிரட்டி இருக்கிறார். டோராவக வரும் டோரா ஸ்ரீ, சாந்தியாக வரும் சுகுமார் சண்முகம் இருவரும் கேரக்டர்களின் தன்மை உணர்ந்து நல்ல நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். மற்றும் வெற்றி, சிவ இளங்கோ உள்பட படத்தில் தோன்றும் அனைவருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு சில படங்களில் டல்லடிக்கிறது. சில இடங்களில் பளீச் என டாலடிக்கிறது. பின்னணி இசையில் நல்ல மெச்சூட். குறிப்பாக க்ரைம் காட்சிகளில் தடதடக்கும் பின்னணி இசை மாஸ் ஹீரோக்களுக்கான மெட்டிரியல். ஹுமார் எழிலனுக்கு இனி நிறைய வாய்ப்புகள் வரும்.
இந்த க்ரைம் கதைக்குள் திருநங்கைகள் வாழ்க்கையை புகுத்தி இருப்பது நியாயம் தான். ஆனால் அவர்களின் பிரச்சனைகளுக்கு இப்படியான குரூர வன்முறை தான் தீர்வு என்று முத்திரை குத்தியிருப்பது தான் பெரும் உறுத்தல். அவர்களின் வாழ்வில் நாம் திருந்தும் படியான பாடங்கள் எத்தனையோ இருக்கின்றன அவற்றை பட்டியல் போட்டிருந்தால் இந்தக் கதை பாசிட்டிவாக இருந்திருக்குமே… சு.சமுத்திரம் எழுதிய வாடாமல்லி என்ற நாவலில் திருநங்கைகளின் சடங்குகள், நம்பிக்கைகள், ஆசைகள் என அப்படியொரு வாழ்வியல் அம்சங்கள் இருக்கும். அவையெல்லாம் இந்தப்படத்தில் உல்டாவாகிருக்கிறது. இருந்தாலும் ஒரு வித்தியாசமான சினிமா அனுபவம் filter gold
M.Jegan kaviraj