Tamil Movie Ads News and Videos Portal

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிக்கை

இன்று நடைபெற்ற தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

1.தமிழ் நாட்டில் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவிவரும் விபிஎஃப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மற்றும் க்யூப் மற்றும் இதர சர்வீஸ் புரோவைடர் நிறுவனங்களிடமிருந்து தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகையை அந்த நிறுவனங்கள் உடனடியாக திருப்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி எங்களுடைய தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் க்யூப் மற்றும் சர்வீஸ் புரோவைடர் நிறுவனங்களுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல விதங்களில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு அவர்கள் செவி சாய்க்காத காரணத்தாலும், வேறு சில காரணங்களைச் சொல்லி காலம் தாழ்த்திக் கொண்டே இருந்ததாலும், க்யூப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்று அவர்கள் தெரிவித்த காரணத்தாலும், இன்று கூட்டப்பட்ட எங்களது தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டத்தில் எங்களால் (தயாரிப்பாளர்களால்) இனிமேல் விபிஎஃப் கட்டணத்தை செலுத்த இயலாது என்பதை நாங்கள் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

2.படத்தை திரையிடுவதற்கான சர்வீஸ் கட்டணம் ஒரு திரையரங்கிற்கு ரூ.1,500 தவிர எங்களால் எந்த விதத்திலும் விபிஎஃப் மற்றும் எந்த கட்டணமும் செலுத்த இயலாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

3. வட இந்திய கம்பெனிகளுக்கு விபிஎஃப் கட்டணம் வாங்கிக் கொள்ளாமலே படத்தை திரையிட வழி செய்யும் போது எங்களுடைய தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும் பாகுபடுத்தி எங்களை பழிவாங்குவது எந்த அடிப்படையில் எங்களிடம் மட்டும் விபிஎஃப் வசூலிப்பது நியாயம் என்றும் மற்றும் எங்களிடம் மட்டும் விபிஎஃப் வசூலிப்பது நியாயமான காரியமாக தெரியவில்லை எனவும் தெரிவித்து கொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்திற்குள் எங்களுக்குரிய பதிலை தராவிட்டால் தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவோம் என்பதை இந்த செயற்குழு கூட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.பின்பு தலைவர் திரு டி.ராஜேந்தர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வில் செயலாளர் JSK. சதிஷ் குமார், பொருளாளர் – K.ராஜன், துணை தலைவர் – P.T. செல்வ குமார், துணை தலைவர் – R. சிங்கார வடிவேலன், இணை செயலாளர் – K.G. பாண்டியன், இணை செயலாளர் – M. அசோக் சாம்ராஜ், இணை செயலாளர் – சிகரம்.R.சந்திர சேகர், தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனர் உஷா ராஜேந்தர், இசக்கி ராஜா, பவர்ஸ்டார் சீனிவாசன், ஆகியோர் உடனிருந்தனர்.