மீண்டும் ஒரு வடசென்னை கதை
ஹீரோ விஜயகுமாருக்கு விளையாட்டுத் துறையில் பெரியாக சாதிக்கவேண்டும் என வேட்கை. காலமும் சூழலும் அடித்தட்டு மக்களை யூஸ் பண்ணும் அரசியலும் கல்லூரி படிக்கும் போதே அவரை திசைமாற வைக்கிறது. அந்தத் திசை மாறலில் ஏற்கெனவே அங்குள்ள, கிருபா ஜோசப் பகையும் உடன் சேர பைட் கிளப்பில் நிறைய அதிர்ச்சிகளும் உணர்ச்சிகளுமாய் கதை விரிகிறது
உறியடி விஜயகுமார் பள்ளி மாணவன் போல வரும் காட்சிகளில் குறும்பாகவும், ஆக்ஷன் காட்சிகளில் இரும்பாகவும் மிளிர்கிறார். நாயகிக்கு பெரியளவிற்கு ஸ்கோப் இல்லை என்றாலும் வரும் இடங்களில் எல்லாம் வசீகரிக்கவே செய்கிறார். நண்பர்களாக நடித்துள்ள அத்தனை பேர்களிடமும் அவ்வளவு எதார்த்தம். பெஞ்சமின், ஜோசப், கிருபா, கார்த்தி என கேரக்டர் பெயர் சொல்லி நடிக்கும் அளவிற்கு மெயின் கதாப்பாத்திரங்கள் கச்சிதமாக நடித்துள்ளனர்.
ஒரு படத்தின் ஆன்மா இசையிலும் ஒளிப்பதிவிலும் இருக்கிறது. அதை உணர்ந்து பணியாற்றுள்ளது இந்த இரு டீமும். எடிட்டர் குறிப்பிடத்தக்க கவனம் பெறுகிறார். கட்ஸ் எல்லாமே ஆகத்தரம். ஸ்டண்ட் காட்சிகளுக்கான லீட் மற்றும் சண்டைக்காட்சிகள் பிரமாதம். டைட்டிலுக்கேற்ற பைட் சீக்வென்ஸ் தெறி ரகம்
வட சென்னையை களமாக கொண்டதால் சில வழக்கமான காட்சிகள் தமிழ் சினிமாவில் இடம்பெறுவது தவிர்க்க முடியாது. ஆனால் அதை கூட சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குநர். இருவர் ஒருவரை எதிர்ப்பதும், அந்த ஒருவர் சாய்ந்த பின் இருவருக்குள் பகை எழுவதும், அந்தப் பகைக்கு பகடைக்காயாக படத்தின் லீட் கேரக்டர் பயன்படுத்தப் படுவதும் என பக்காவான ஸ்கெட்ச் ஆக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே வரும் எமோஷ்னல், நேட்டிவிட்டி பாடல்கள் என சிறப்பாக வசீகரிக்கிறது பைட் கிளப்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்