Ott plus இறக்கியிருக்கும் ஒரு தரமான content பெமினிஸ்ட்
லாக்டவுனில் ஒன்றாக இருக்கும் சூழல் வருகிறது ஹீரோ ஹீரோயினுக்கு. இருவரும் பெண்ணியம் பேணுபவர்களாக காட்டப்படுகின்றனர். வாழ்வின் எதார்த்தம் புரிந்தவர்களாக அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். லாக்டவுன் நாட்களில் தொடர்ந்து பேசுகிறார்கள், சமைக்கிறார்கள், குடிக்கிறார்கள். நாட்கள் கடக்கின்றன. ஒருநாள் இருவருக்கும் உடல் பரிமாறும் சூழல் வருகிறது. அதன்பின் அவ்விருவர்களின் மன மாற்றங்களை எதார்த்தம் மாறாமல் பேசியுள்ளார் இயக்குநர் கேபிள் சங்கர்
ஹீரோ ஹீரோயின் இருவர் மட்டுமே இந்த எபிசோடின் முக்கிய மாந்தர்கள். இருவரின் நடிப்பிலும் இயல்புத்தன்மை நிறைந்துள்ளது. போகிற போக்கில் அடித்துவிடும் தத்துவ வசனங்களை எல்லாம் அசால்டாக பேசி அசத்தியுள்ளனர்.
அரைமணி நேர எபிசோட் என்பதால் விறுவிறு என ஜாலியாக போகிறது. ரூமி பற்றிப் பேசிக்கொள்ளும் இடங்கள் எல்லாம் செம்ம. குறிப்பாக அந்த ரூமியை க்ளைமாக்ஸில் இணைத்த விதத்தில் தனித்துத் தெரிகிறார் ரைட்டர் கேபிள் சங்கர்
லாக்டவுன் நேரத்தில் எடுத்த விஷுவல்ஸ் என்பதால் சில சமரசங்கள் தெரிகிறது. சமகாலம் மட்டுமல்ல..எல்லாக் காலத்திலும் செக்ஸுக்கு முன்னும் செக்ஸுக்குப் பின்னும் ஆண்/பெண்ணின் மனநிலை இப்படித்தான் இருக்கும் என்று போட்டுடைத்த உண்மை இந்த பெமினிஸ்ட்-ன் அடுத்த எபிசோடிற்காக வெயிட் பண்ண வைக்கிறது
3.25/5
-மு.ஜெகன் கவிராஜ்